கிழட்டு பயலே… என் கையில கிடச்ச செருப்பால அடிப்பேன்… கடுப்பில் பிக்பாஸ் தாமரை!

Thamarai Selvi: பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் கலந்துக்கொண்டு புகழ் பெற்ற தாமரை சமீபகாலமாக வெளியிட்டு வரும் வீடியோக்களால் வைரலாகி வரும் நிலையில் கடுப்பில் அவர் போட்டு இருக்கும் ஒரு வீடியோ தற்போது செம ஹிட்டடித்து வருகிறது. 

தாமரை செல்வி பிக்பாஸில் செம பரபரப்பாக இருந்தார். டைட்டில் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார். பின்னர் அவருக்கு சீரியல் வாய்ப்பெல்லாம் வந்தது. அப்படி அவர் நடித்தது தான் விஜய் தொலைக்காட்சியின் சின்ன மருமகள்.

இதில் ஹீரோயின் ஸ்வேதாவுக்கு அம்மாவாக நடித்தார். அப்போ அவருக்கு ஹீரோயின் உடனும் அவர் காதல் கணவரான ஆதியுடனும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரையும் வீட்டில் தங்க வைக்கும் அளவுக்கு பாசமாக இருந்து இருக்கிறார். 

பின்னர் ஸ்வேதா அவரிடம் இருந்து பிரிந்து விட்ட நிலையில் ஆதி தானாக பேட்டி கொடுத்து அவர் கணவர் என்பதை பிரபலப்படுத்தி கொண்டார். அதை தொடர்ந்து பிரச்சனை பெரிதாகிய நிலையில் தாமரைச்செல்வி ஆதி தன்னுடைய மூணு பவுன் நகையை வித்துவிட்டதாக அதிர்ச்சி வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் தாமரை செல்விக்கும் ஆதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் பேசி இருப்பார். அந்த வீடியோ வைரலான நிலையில் இதில் கடுப்பான தாமரை கோபத்தில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். 

அதில், நீலாம் மூத்த பத்திரிக்கையாளரா? பெண்ண பத்தி உனக்கு என்ன தெரியும்? டேய் கிழட்டு பயலே, அந்த ஆதி என் வீட்டுக்காரருக்கு கால் தூசிக்கு வருவனா? அவனுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்புனு எப்படி பேசிட்டு இருக்க நீ!

வெட்கமே இல்லையா? இப்படி பேசிட்டு அதில் வரும் பணத்துக்கு பதிலாக வேறு வேலையே செய்யலாம். டேய் கிழட்டு பயலே, உன்ன நான் சும்மாவே விடமாட்டேன். உன்ன எங்கையாச்சு நேருல பார்த்தா,செருப்பை கழட்டி அடிப்பேன் என கடுமையாக கிழிச்சு விட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.