ஒரு ரன்னை மிஸ் செய்த விராத் கோஹ்லி.. ஏமாற்றம் அடைந்த அனுஷ்கா சர்மா..!

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

 

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, ஆர்சிபி வீரர் ராசிக் சலாமின் அனல் பறக்கும் பந்துவீச்சில் சிக்கி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது இந்த சீசனில் அந்த அணியின் மிகக்குறைந்த ஸ்கோராகும். புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பக்கபலமாக இருந்தார்.

 

147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அதிரடியாக ஆடிய அவர் 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆவேஷ் கான் பந்துவீச்சில் நிக்கோலஸ் பூரணிடம் பிடிபட்டு அரைசதத்தை தவறவிட்டார். 

 

அவர் அவுட்டானதும் மைதானத்தில் இருந்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா மிகுந்த ஏமாற்றமடைந்தார். இருப்பினும், கேப்டன் ரஜத் படிதார் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோரின் பங்களிப்பால் ஆர்சிபி அணி 15.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 

 

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.