காகிதத்தில் அச்சிட பயன்படுத்தப்படும் மையில் ஈயம் இருப்பதாகவும் அவை சூடாகும்போது உணவில் ஒட்டி வயிற்றுக்குள் சென்று உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற நிபுணர்களிடம் பிபிசி பேசியது.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. பிரசாரத்திற்கு கடைசி நாளான இன்று முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசியது என்ன? கடைசி நாளில் தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளர் கைது செய்யப்பட்டது ஏன்?
தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் வசிக்கும் ராணுவ வீரர்களை இலக்காக வைத்து மோசடி நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. முன்னாள் ராணுவத்தினரை குறிவைத்த பின்னணி என்ன?
பிரிட்டனில் ஒரு பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தனது முன்னாள் துணையை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். ஆனால் அந்தக் குழந்தைகள் உண்மையில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என என நீதிமன்றம் கருதியது. இதை, உயர் நீதிமன்ற நீதிபதி, "அசாதாரணமான", "மிகவும் விரிவான ஏமாற்று நடவடிக்கை" என்று வர்ணித்தார்.
வெங்காயத்தின் குணப்படுத்தும் சக்தி குறித்த கூற்றுகள் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பரவி வருகின்றன. ஆனால், வெங்காயத்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவோ அல்லது தொற்றைக் குணப்படுத்தவோ முடியும் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபை விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி, விமானி ஸ்மித் மீது விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் கோடரியால் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என இந்திய அணி வென்றிருக்கிறது. பல பெரிய பெரிய சேஸ்கள் அரங்கேறிய இந்த ஒருநாள் தொடர் நமக்கு உணர்த்திய சில முக்கியமான விஷயங்களை இங்கே அலசுவோம்.