இலங்கையின் மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சியைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணி என்ன? இந்த முயற்சிகள் பொருளாதாரம் மேம்பட உதவுமா?
அமெரிக்காவில் கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்டா பைக்குக்கு, டென்னசி மாகாண அதிகாரிகள் மரண ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முயன்றது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு "உயிர் காக்கும் சிகிச்சைகள்" அளிக்கப்பட்டு வருகின்றன.
விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் ஆகியோர் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள ’பத்தா’ திரைப்படம் எப்படி இருக்கிறது? முன்னணி ஊடகங்களின் விமர்சனங்கள் என்ன சொல்கின்றன.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற விமானத்தில் புதன்கிழமை அன்று நடந்த சம்பவம், காக்பிட் எனப்படும் விமான ஓட்டுநர் அறைக்குள் உள்ள பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தைத் ஏற்படுத்தியுள்ளது.
தாயின் நஞ்சுக் கொடியில் கூட மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன." - திங்கள்கிழமையன்று (செப்டம்பர் 28) சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் குமார் சந்தானத்திற்கு Global Change Maker Honour 2026 விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கட்டடத் துறை நிறுவனமான DAC De