ஈஸினு நினைச்சு தொடங்கினேன்; ஆனா, கிரிக்கெட்டை விட கஷ்டம்.! - விவசாயம் குறித்து தோனி
கிரிக்கெட்டை விட விவசாயம் தான் கடினம். விவசாயம்தான் தனக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்ததாகப் பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.
ACKO Purple Carpet என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் தோனி, “என்னிடம் ஒரு பெரிய நிலம் இருந்தது. ஒரு நாள் அதில் விவசாயம் தொடங்கலாம் என்று நினைத்தேன். அது மிகவும் எளிதானதாக இருக்கும் என்று எண்ணி, ஸ்ட்ராபெரி பயிரிட முடிவு செய்தேன்.
கொஞ்சம் ஸ்ட்ராபெரி செடிகள், தண்ணீர் மற்றும் சரியான வானிலை இருந்தால் போதும், எல்லாம் சுமுகமாக வளர்ந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், நான் அதைச் செயல்படுத்தத் தொடங்கியபோதுதான், விவசாயம் என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தேன். உண்மையைச் சொல்லப் போனால், கிரிக்கெட்டை விட விவசாயம் தான் கடினம்.
விவசாயத்தை விட கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. கிரிக்கெட்டில் முயற்சியும், சரியான முடிவுகளை எடுப்பதும் மிகவும் முக்கியம். ஆனால் விவசாயம் எனக்கு அதைவிட மிக முக்கியமான ஒன்றான பொறுமையைக் கற்றுக்கொடுத்தது" என்று பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


