தேசிய கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்டியா? கைதாக வாய்ப்பு என தகவல்..!

அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தேசிய கொடியை தனது உடலில் சுற்றிக்கொண்டு ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. 

 

இது தொடர்பாக வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் புனே காவல்துறையிடம் ஹர்திக் பாண்டியா மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய கோரி புகார் அளித்துள்ளார். தேசிய கொடியின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பாண்டியா நடந்து கொண்டது சட்டப்படி குற்றம் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைகளை வென்றது தனது தனிப்பட்ட உறுதிமொழிக்கு கிடைத்த வெற்றி என பாண்டியா பெருமிதம் தெரிவித்துள்ளார். 2024 வெற்றியை தொடர்ந்து, 2026 உலகக்கோப்பையிலும் நமிபியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

 

தொடர் முழுவதும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா, ஐசிசி கனவு அணியிலும் இடம் பிடித்துள்ளார். இருப்பினும், தேசியக்கொடியை அவமதித்ததாக எழுந்துள்ள இந்தப் புகார் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.