கார்த்திக் சுப்பராஜின் 10வது படம் ‘டோரதி’: டொராண்டோ திரைப்பட விழாவில் உலகத் திரையிடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ், தனது 10வது திரைப்படமான ‘டோரதி’ (Dorothy) பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்மம் ஃபிலிம்ஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கையில், “இது எனது பத்தாவது படம். பல ஆண்டுகளாக நான் இயக்க வேண்டும் என்று நினைத்த, எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு கதை இது. அதுவும் இசைஞானி இளையராஜா சார் இசையில் இப்படம் உருவாகியுள்ளது எனக்கு மிகப்பெரிய பெருமை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் உலகளாவிய முதல் திரையிடல் (World Premiere) புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 25, 2026 அன்று இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.