சட்டமன்றக் கூட்டம்: ``அதுவெறும் ரீல்தான் ரியல் இல்ல - முதல்வர் விஜய் | Live Update
அதுவெறும் ரீல்தான் ரியல் இல்ல -முதல்வர் விஜய்
ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடந்து முடிந்த நிலையில், இன்று முதல்வர் விஜய் பதிலுரை வழங்குகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும், சபா நாயகருக்கும், எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி என நிரூபிக்க முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி எனப் பேசத் தொடங்கிய முதல்வர் விஜய், நான் நேரடியாக ஷூட்டிங்கிலிருந்து நேராக முதல்வர் ஆனதாக நினைச்சிட்டு இருக்காங்க. அவங்க மொழியிலேயே சொல்வதாக இருந்தால் அது வெறும் ரீல் தான் ரியல் இல்ல. சாதரண நடிகராக என் வாழ்க்கை தொடங்கியது. ஆனால் என் வளர்ச்சிக்கு மக்களின் அன்புதான் காரணம்.
முதல்வரின் பதில்கள் இன்று!

சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எழுந்த சலசலப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு, மின்சாரப் பிரச்னை எனப் பல்வேறு கேள்விகளை முதல்வரை நோக்கி வீசியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கு இன்றையக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


