ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது. நிறையப்பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா.ம.க- வில் பதவி வழங்குவதில் தொடங்கி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதரவு, சுயேச்சை நிலைப்பாடு வரை தந்தையும் மகனும் எதிரெதிர் துருவங்களில் நின்று வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ஏ.வ.வேலு தொடர்புடைய சென்னை வீடு உள்ளிட்ட 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரரும், கரூர் மாவட்டத்தின் முக்கிய புள்ளியாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சங்கர் ஆனந்த் வீட்டி
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலன் சேதனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை
தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மே 7-ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவுடன் தொடங்கியது.
ஜூன் 5 முதல் ஜூன் 18 வரை முதற்கட்டக் கலந்தாய்வு திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு இடங்கள் நிரம்பாததால் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.