திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் என நீளும் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் ஒன்று .
இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமைந்துள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவானது, ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த இடத்திற்குச் செல்ல முறையான அரசுப் போக்குவரத்து வசதி இல்லை என்பதுதான் வருத்தமான ஒன்று