கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திரைப்படமான ‘அன் ஆர்டினரி மேன்’ (An Ordinary Man) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்குநராகக் களம் காணும் இத்திரைப்படத்தை, ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் பிரபல பாடகியான கெனிஷா (Keneeshaa) இசையமைப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காட்டுக்குள் ஒரு புதிய இசை நுழைந்துள்ளது. ஒரு புதிய அத்தியாயம். அதே ஆன்மா. இதுவரை நீங்கள் கேட்டிராத ஒரு புதிய பரிமாணத்தில் ஒரு கலைஞர்” என்று வர்ணித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலில் ரஞ்சித் கே.ஜி மற்றும் சிங்கப்பூர் தமிழ் ராப்பர் யுங் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan Studios (@ravimohanstudios)

இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி வெளியீட்டு உரிமையை முன்னணி தளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது. பன்முகத் திறமையாளர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், திரையரங்கு மற்றும் ஓடிடி ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.