கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்.. தோல்வி அடைந்த கொல்கத்தாவுக்கு கடைசி இடம்..!

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 25-வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

 

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, கேமரூன் கிரீனின் அதிரடியான 79 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணியின் பந்துவீச்சில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அசோக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் தூணாக நின்று விளையாடினார். அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

 

ஜோஸ் பட்லர் 25 ரன்களும், சாய் சுதர்சன் 22 ரன்களும் எடுத்து நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். இறுதியில் 19.4 ஓவர்களிலேயே குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.