"விமானத்திற்குள் காவலர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் மற்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்திடம் ஏர் இந்தியா விளக்கம் கோரியுள்ளது."
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் அக்டோபர் 10 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காக்ரோச் ஜனதா கட்சி இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
"நாங்கள் மோதி மற்றும் டெல்லி காவல்துறையின் ஆதரவாளர்கள், ஆனாலும் அவர்கள் எங்களைக் கைது செய்துள்ளனர். அவர்களின் கௌரவத்தைக் காக்க வந்திருந்தும் அவர்கள் எங்களைக் கைது செய்துள்ளனர்."
சிஜேபி முக்கிய தலைவர்களான அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய மூவரும் சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் விமானத்துக்குள் இருந்தபோதே காவலில் எடுக்கப்பட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். காவல்துறை பிடியில் இருந்த போது தங்களுக்கு என்ன நடந்தது என்று அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோதி, தமிழக முதலமைச்சர் விஜயுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். தொடர்ந்து சென்னை ஐஐடியில் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
டெல்லியில் சுமார் 20,000 போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏறத்தாழ 35,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் டெல்லி காவல்துறையினருடன், பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இவ்வளவு பெரிய அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.