இலக்கியக் கதாபாத்திரமான டிராகுலாவிற்கு அடிப்படையாக இருந்த, 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வலாக்கியா இளவரசர் விளாட் தி இம்பேலர், ஒட்டோமான் படையெடுப்புகளுக்கு எதிராகக் கொடூரமான கழுவேற்றம் மற்றும் போர்த்தந்திரங்களைக் கையாண்டு பேரழிவை ஏற்படுத்தியதால் ஒருபுறம் இரத்தவெறி பிடித்த கொடுங்கோலனாகவும், மறுபுறம் ருமேனியாவின் தேசிய நாயகனாகவும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறாà
எல் நினோ காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழையும் வெள்ளமும் ஏற்படலாம் என்றும், அதன்பிறகு தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, கடுமையான வெப்பம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜஹீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ஸ்டீஃபன் ஃபிளெமிங் விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
"சிறுவயதில் அத்தை பையனாக அவரை பார்த்துள்ளேன். பின் பல ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பே இல்லாமல் போனது. பின் எனது திருமண நிச்சயத்தின் போது மீண்டும் அவரை நேரில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. பிறகு சரி முன்பு நமது அத்தை பையனாக இருந்தவர், இப்போது அத்தை பொண்ணாக இருக்கிறார் என நான் புரிந்துகொண்டேன்."
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 15 பேருக்கு 200 வருடங்களுக்கும் அதிக கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்திய அரசியல் களத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரையன் கார்டன் மற்றும் ரிகார்டோ மார்டினெஸ் ஆகியோரின் வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் கருப்புக் கரடிகள் ஜாலியாக ஓய்வெடுக்க விரும்புகின்றன
வந்தே மாதரம் பாடலின் அனைத்து சரணங்களையும் பாடாததற்கான தண்டனை வழங்கும் விதியை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதக் காரணங்களுக்காக ஒருவர் வந்தே மாதரம் பாடவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
வீரமணி கைது விவகாரம் தொடர்பாக த.வெ.க மற்றும் தி.மு.க இடையே மோதல் வலுத்து வருகிறது. தங்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறிய கருத்தை, அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.