கொளத்தூர் தொகுதி த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு, நீண்டகால சுவாசப் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 70 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 75-ஆவது வயதில் காலமானார்.
வடசென்னையில் தி.மு.கவின் முக்கிய முகமாக அறியப்பட்ட அவர், 2006-ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியிà®
எனது அம்மா துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர். அவர் கடந்த பிப்ரவரியில் இறந்துவிட்டார். அவரை இங்கேதான் புதைத்தோம். இப்போது அந்த இடமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக்கிடக்கிறது. குப்பைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் எங்கள் மக்களை புதைத்து வருகிறோம். நாங்கள் அருந்ததியர் என்பதால் 84 சென்ட் மயான இடத்தில் வெறும் 10 சென்ட் இடத்துக்குள் எங்களை முடக்குகின்றனர்!
பியூ ஆய்வின்படி, 2070ஆம் ஆண்டிலும் இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்; அதேவேளையில், முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பங்கு 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப், புதின் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் மூலம் உலக அரசியலில் சீனாவின் செல்வாக்கை வெளிப்படுத்த ஷி ஜின்பிங் முயன்றாலும், யுக்ரேன் போர், அணு ஆயுதக் கட்டுப்பாடு, உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி ஆகியவை அவருக்குச் சவாலாக உள்ளன.
யார் இந்த நீதிபதி எம்.வி. முரளிதரன்? அவரது முந்தைய தீர்ப்புகள் ஏன் விவாதப் பொருளாகிறது? அவரது நியமனம் தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்படும் கருத்துகள் என்ன?
அக்வான் புயல் ஆந்திரா – ஒடிசா கடற்கரையைக் கடக்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 23, 24ஆம் தேதிகளில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், டெல்டா மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.