யுவன் சங்கர் ராஜா இசையில் பாடலாசிரியராகும் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன்! எந்தப் படத்தில் தெரியுமா?

மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் ராஜாஸ் பிளேலிஸ்ட் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார்.

Yuvan Shankar Raja

இவருடைய கவிதைகளுக்காகவும் சமீபத்தில் பலரின் பாராட்டுகளை இவர் பெற்றிருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜாவும், மறைந்த நா.முத்துக்குமாரும், 75-க்கும் மேற்பட்ட படங்களில் 400-க்கும் அதிகமான பாடல்களைத் தந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளியான படம் தரமணி.

இவர்களின் கூட்டணியிலிருந்து தமிழ் சினிமாவுக்குப் பல முக்கியமான பாடல்கள் கிடைத்துள்ளன. ராஜாஸ் பிளேலிஸ்ட் திரைப்படத்தை, குடும்பஸ்தன் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.

Raja's Playlist Movie
Rajas Playlist Movie

எலிஃபென்டைன் எக்ஸ் பேனரின் கீழ் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக இணைந்துள்ளார்.

மேலும், வெங்கட் பிரபு இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இளையராஜாவின் சகோதரர் பாஸ்கரின் மகன் ஜெயன், சோனா ஒளிக்கல், வாகை சந்திரசேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.