பூமி தட்டை என்று நினைத்திருந்த காலத்தில் மதம் உருவானது - கிருத்திகா பதிவு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,

பூமி தட்டையானது என்று மனிதர்கள் நினைத்திருந்த காலத்திலும், பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் நம்மைக் கொல்லக்கூடும் என்பது தெரியாத காலத்திலும் அவர்கள் மதத்தை உருவாக்கினார்கள்.

பயத்தின் காரணமாகவே அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது அவர்களுக்குப் போதிய விவரம் தெரியவில்லை.

குரங்கு மூளையில் ஏற்பட்ட...

ஆனால் இன்றைக்கு, நமக்கு விவரம் தெரிந்த பிறகும், எந்த அர்த்தமும் இல்லாத சடங்குகளைப் பற்றி இன்னும் நீதித்துறை மற்றும் அறிவார்ந்த விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய இந்த மிகவும் அபத்தமான இருப்பே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்றும், நம்முடைய குரங்கு மூளையில் ஏற்பட்ட ஒரு பரிணாமக் கோளாறினால்தான் நாம் சண்டையிட்டுக்கொண்டும் சச்சரவு செய்துகொண்டும் இருக்கிறோம் என்றும் நான் இன்னும் வாதிட விரும்புகிறேன்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.