ஏ.ஐ. தொழில்நுட்பப் பின்னணியில் ‘இரும்புத்திரை 2’… சமந்தா கால்ஷீட்டிற்காகக் காத்திருக்கும் விஷால் – பி.எஸ். மித்ரன் கூட்டணி!

கடந்த 2018-ஆம் ஆண்டு விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சைபர் த்ரில்லர் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘இரும்புத்திரை 2’ (Irumbu Thirai 2) படத்திற்காக விஷால் மற்றும் பி.எஸ். மித்ரன் மீண்டும் இணையத் திட்டமிட்டுள்ளனர். தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு இரண்டாம் பாகத்தின் கதை உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிப்பது தொடர்பாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) மற்றும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் (5 Star Kathiresan) ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக ‘இரும்புத்திரை 2’ அமையவுள்ளதால், நடிகை சமந்தாவின் கால்ஷீட்டிற்காகப் படக்குழு காத்திருக்கிறது. சமீபத்தில் தாயான சமந்தா, மீண்டும் படப்பிடிப்புகளுக்குத் திரும்பச் சற்று கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கச் சற்று தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ‘இரும்புத்திரை 2’ படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக விஷால் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளார். மறுபுறம், இயக்குநர் பி.எஸ். மித்ரன் தனது அடுத்த திரைப்படத்திற்காக மற்ற முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்காக தனுஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோரை அணுகியுள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


