டிசம்பரில் அனிருத் டபுள் தமாக்கா! சிம்புவின் ‘அரசன்’ 8 நிமிட புரமோ, ரஜினியின் ‘தர்மன்’ பிறந்தநாள் கிளிம்ப்ஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், வருகிற டிசம்பர் மாதத்தில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கத் தயாராகி வருவதாகத் திரையுலக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிக்கும் ‘அரசன்’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ ஆகிய இரு பிரம்மாண்ட படங்களின் சிறப்புப் புரமோ பணிகளில் அனிருத் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (STR) நடித்துள்ள ‘அரசன்’ (Arasan) திரைப்படத்தின் 8 நிமிட சிறப்பு கிளிம்ப்ஸ் புரமோ வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ‘ட்ரெயின்’ (Train) திரைப்படத்துடன் திரையரங்குகளிலும் இந்த ‘அரசன்’ புரமோ திரையிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 8 நிமிடப் புரமோவிற்கான மிரட்டலான பின்னணி இசைப் பணிகளை அனிருத் மேற்கொள்ள உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ (Dharman) திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவிற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தச் சிறப்பு கிளிம்ப்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரசிகர்களுக்குப் பரிசாக வெளியாகவுள்ளது.

ஒரே மாதத்தில் சிம்பு மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இரு உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கான சிறப்புப் புரமோக்களில் அனிருத் இணையவுள்ள செய்தி, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.