TV Update: ரன்னரான வின்னர், வில்லங்க மாமனார்... பாலியல் தொல்லை புகாரில் டிவி பிரபலங்கள் தலைமறைவு?
தமிழின் முதல் தனியார் சேட்டிலைட் சேனலாக சன் டிவி வந்த புதிதில் தினந்தோறும் திரைப்படங்களை ஒளிபரப்பும்போது நகைச்சுவை வாரம், ஆக்ஷன் வாரம் என ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு சப்ஜெக்ட்டை எடுத்து அது தொடர்பான படங்களை ஒளிபரப்புவார்கள்.
அந்த வகையில் பார்த்தால் இந்த வாரம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் தலைமறைவு வாரம் போல. இரண்டு டிவி பிரபலங்கள் ஒரே நேரத்தில் தலைமறைவாகி இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
யார் யார் என்பதைப் பார்க்கலாம்.
வில்லங்க மாமனார்?
சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் அப்பா, மாமனார் முதலான கேரக்டர்களில் நடித்து வந்தவர் ரவிச்சந்திரன். அதுவும் குடும்பத்தைப் பிரிக்கும் வில்லங்க மாமனார் கேரக்டர் இவருக்குச் சிறப்பாக செட் ஆகி வந்தது. கடந்த சில வருடங்களாக பாஜகவுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். கடந்த தேர்தலில் அந்தக் கட்சிக்காகப் பிரசாரமும் செய்தார்.
இவர் சில தினங்களுக்கு முன் யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டி முடிந்ததும் பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அந்தப் பெண் போலீசில் புகார் தந்தார்.
புகாரையடுத்து ரவிச்சந்திரன் மீது சென்னை அசோக் நகர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறது.
முன் ஜாமினுக்கு அப்ளை செய்திருக்கும் ரவி தற்சமயம் தலைமறைவாகி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

வின்னர் இப்போது ரன்னர்!
சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த முத்துக்குமரன் யூடியூப் சேனல் ஆங்கராக இருந்து டிவிக்குள் வந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானதும் இன்னும் பிரபலமானார்.
தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் கருத்து சொல்வது, வீடியோ வெளியிடுவது எனப் பரபரப்பாக இயங்கி வந்தார்.
ஒருசில திரைப்பட வாய்ப்புகளும் வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் யூடியூபில் ஏற்கனவே பிரபலமாக இருந்த பெண் ஒருவர், தன்னுடன் முத்துக்குமரன் நெருங்கிப் பழகியதாகவும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி ஏமாற்றியதாகவும் வீடியோ வெளியிட்டார்.
அந்தப் பெண் மீது முத்துக்குமரன் போலீசில் புகார் தர, அந்தப் பெண்ணும் போலீஸுக்குச் சென்றார். தற்போது அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிந்திருக்கின்றனர்.
எனவே தன்னை போலீஸ் கைது செய்யலாம் என எண்ணிய முத்துக்குமரன் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


