நிதானமான விளையாடும் ருத்ராஜ்.. கேப்டனை மாற்ற சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை...

 

 

அபிஷேக், பிரியான்ஷ், வைபவ், பிரப் போன்ற அதிரடி வீரர்கள் களமாடும் இன்றைய நவீன டி20 கிரிக்கெட் உலகில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி வரும் அணுகுமுறை குறித்து ரசிகர்கள் மத்தியில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன. 

 

2023-ஆம் ஆண்டு ஐபிஎல் வரை சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ், அதன் பிறகு டி20 கிரிக்கெட் வேகமாக மாறிய நிலையிலும், பழைய பாணியிலேயே நிதானமாக விளையாடுவதாக கெய்க்வாட் ரசிகர்களே ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

 

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் நவீன டி20 ஆட்டத்திற்கு ஏற்ப அவர் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்காதது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. விசுவாசம் என்ற பெயரில் தொடர்ச்சியாக சீசன்களை இழக்க தயாராக இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அணுகுமுறை தொடர்ந்தால், வரவிருக்கும் ஐபிஎல் 2027 தொடரில் சிஎஸ்கே அணியின் நிலை என்னவாகுமோ என்ற கவலை எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.