அந்த நபரின் வாழ்க்கை கருதி... அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது! - இயக்குநர் சேரன்
ஜெயா டி.வி-யில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் யார் சரி என்கிற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட் பாப்புலாரிட்டி எதில் அதிகம் கிடைக்கிறது? சினிமாவா? சின்னத்திரையா? சோசியல் மீடியாவா? என்கிற தலைப்பில் நடைபெற்றிருந்தது.
இந்த எபிசோடில் கலந்துகொண்ட சமூக வலைதளப் பிரபலம் திவாகருக்கு, சேரன் சில அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
அந்த எபிசோட் வெளியான பிறகு திவாகர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், சேரன் சார் என்னைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் எனப் பேசி ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த எபிசோடின் அன் கட் வீடியோவை ஜெயா டி.வி வெளியிட்டிருக்கிறது.
அந்தக் காணொளியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் சேரன், "இதுவே உண்மையில் நடந்தது. அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவரக் காரணமாகிவிட்டார்.
முடிந்தவரை அமைதியாகப் பொறுமையாகத்தான் இருந்தோம். ஆனால் அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்தது.
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள். ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதைப் பார்த்துக் கடந்து செல்பவன் அல்ல நான்.
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது... சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.. ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்.. ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்.. அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்... ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை... https://t.co/ZogNrs8P7j
— Cheran Pandiyan (@CheranDirector) November 23, 2026
அவனைச் சரிசெய்து விடமாட்டோமா, இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் எனக் காப்பாற்றிப் புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன். ஒரு உயிர் போய்விட்டால் அவனை நம்பி உயிர்கள் இருக்குமே எனக் கவலைப்படுபவன் நான்.
அவர் பேசுவதால் என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும், கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை; என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன். இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றியிருந்தால் இந்தச் சமூகம் இப்படித்தான் பேசுமா? அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம், சேரன் இப்படி நடக்கலாமா எனப் பேசித்தான் இருப்பார்கள்.
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னைத் தொலைக்கத் தயாராக இல்லை" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


