ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநரின் பேத்தியை மணந்தார் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின்!
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அஸ்வின் குமார்.
இதனைத்தொடர்ந்து கதாநாயகனாக ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தில் நடித்தார்.
தவிர ‘செம்பி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘ஆதித்யா வர்மா’, ‘மீட் க்யூட்’, ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் அஸ்வின் குமார் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அஸ்வின் குமார், புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
கோவையில் இன்று (நவ.20) உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.
தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாப்பிள்ளை, தர்மதுரை, விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் ராஜசேகரின் பேத்தி தான் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் - புவனேஸ்வரி ஜோடியின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

