``அவருடைய சிந்தனைகளே என்னை ஊக்கப்படுத்தின - TIME 100 Next India பட்டியலில் இடம்பெற்றது பா.ரஞ்சித்
அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் (TIME) இதழ், தனது 103 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான பிரத்யேக சர்வதேசப் பட்டியலான டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா (TIME100 Next India) பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஏழு மாத காலத் தீவிரப் பணிகளுக்குப் பிறகு, நேற்று (நவம்பர் 19-ம் தேதி) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் துல்கர் சல்மான், சாய் பல்லவி, பார்வதி, இசையமைப்பாளர் அனிருத், தெருக்குரல் அறிவு, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.
இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``TIME 100 Next India பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை எண்ணி மிகவும் பணிவும், ஆழ்ந்த நன்றியுணர்வும் கொள்கிறேன். இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையது மட்டுமாக இருந்ததில்லை. எண்ணற்ற மனிதர்கள், பகிரப்பட்ட கனவுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் என் குழுவினர், சக படைப்பாளிகள், கலைஞர்கள் என என்னுடன் துணைநின்று என் படைப்புகளின் மீது நம்பிக்கை வைத்த அனைவரின் அசைக்க முடியாத ஆதரவாலும் செதுக்கப்பட்டது.
இந்த அங்கீகாரம் நம் அனைவருக்குமானது. எல்லாவற்றுக்கும் மேலாக, புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள். சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்கான அவரின் தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும், வாழ்நாள் போராட்டமுமே என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி என் பயணத்தை வழிநடத்துகின்றன. என் பயணத்தை மிகுந்த அன்போடும் ஆழமான புரிதலோடும் பதிவு செய்த நடிகர் ஆர்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Truly humbled and deeply grateful to be recognised on the @TIME #TIME100NextIndia list. This journey has never been mine alone. It has been shaped by countless people, shared dreams, collective efforts and the unwavering support of my team, collaborators, artists and everyone who has stood by me and believed in my work. This recognition belongs to all of us. Above all, my deepest gratitude to Babasaheb Dr. B.R. Ambedkar, whose vision, thoughts and lifelong struggle for equality, dignity and social justice continue to inspire me and guide my journey. My heartfelt thanks to @arya_offl for capturing my journey with such warmth and thoughtfulness. Congratulations to everyone on the list. It is an honour to share this moment with @therukural, @gracebanu and @k.a.n.d.a.s.a.m.y. Grateful for the journey. More committed than ever to the work ahead. Jai Bhim! #TIME100NextIndia #JaiBhim
— pa.ranjith (@beemji) November 19, 2026
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். தெருக்குரல் அறிவு, கிரேஸ் பானு மற்றும் மீனா கந்தசாமி ஆகியோருடன் இந்தத் தருணத்தைப் பகிர்ந்து கொள்வது பெருமையாக உள்ளது. கடந்து வந்த பயணத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இனி செய்ய வேண்டிய பணிகளில் முன்பை விடவும் அதிக உறுதியுடன் ஈடுபடுவேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

