என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி
டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்தி தன்னுடைய பணிப்பெண்ணை அவரிடம் அறிமுகப்படுத்தி அவருடன் புகைப்படம் எடுக்க வைத்திருக்கிறார்.
சோனியா காந்தியின் சுயசரிதை நூலான Belonging நூலின் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்திருந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய்யும் கலந்துகொண்டார்.
விஜய்க்கு ராகுல் காந்தி அருகே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா இருவரும் மேடையேறி புத்தகத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல்வர் விஜய்யைச் சந்தித்த, பிரியங்கா காந்தி கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் பெண்ணுக்கு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என பிரியங்கா காந்தி விஜய்யிடம் கூறியிருக்கிறார்.

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட விஜய், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் நலம் விசாரித்து ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசியும் அனுப்பியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


