U19: நாங்க அப்படி இல்ல..!- இந்திய வீரர்களின் ஆக்ரோஷக் கொண்டாட்டம் குறித்து பாக்., முன்னாள் வீரர்
U19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய விதம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் பேசியிருக்கிறார்.
ஓமன் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்து வரை போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் முன்பு வெற்றியை ஆக்ரோஷமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் இந்திய வீரர்களின் கொண்டாட்டம் குறித்து பேசியிருக்கிறார்.
"நாம் கிரிக்கெட் மட்டும் விளையாடக் கூடாது, நல்ல விழுமியங்களோடும் (values) செயல்பட வேண்டும். இன்றும் கூட நான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி நல்ல விதமாகவே பேசுகிறேன்.
உலகின் சிறந்த பேட்டர் அவர்தான் என்று இப்போதும் நினைக்கிறேன். வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி என நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் இதுபோல் எதிர்வினையாற்றியதில்லை" என்றிருக்கிறார்.
Yesterday, the Indian U-19 team snatched victory from the jaws of defeat against their arch-rivals, Pakistan in the #AsiaCupU19Final to win the championship.
— Jayesh Mehta (@JMehta65) November 15, 2026
Our youngsters celebrated their victory aggressively with youthful exuberance. (Video 1).
Several Pakistani commentators… pic.twitter.com/bCTqRlIPtn
தொடர்ந்து பேசிய அவர், " தொடர் முழுவதும் பாகிஸ்தான் மிகவும் சிறந்த, வலுவான அணியாக இருந்தது. ஆனால் அவர்களால் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை. எப்போதும் போலவே, நெருக்கடியான தருணங்களில் அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது என்பது இந்தியாவிற்குத் தெரிந்திருக்கிறது.

வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். ஆட்டத்தை முடித்து வைக்கும் திறன், நம்பிக்கை மற்றும் அதற்கான வீரர்கள் இந்திய அணியிடம் இருந்தனர்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


