போட்டியின்றி மீண்டும் ஐசிசி தலைவர் ஆனார் ஜெய் ஷா.. குவியும் வாழ்த்துக்கள்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி வாரிய மற்றும் குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஐசிசி இயக்குநர்களின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அவரது தலைமையின் மீது வாரியம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
உலகளவில் கிரிக்கெட் விளையாட்டை விரிவுபடுத்துதல், புதிய ரசிகர்களை உருவாக்குதல் மற்றும் வணிக ரீதியான வெற்றியை அடைதல் போன்ற முக்கிய கட்டத்தில் இந்த தொடர்ச்சி உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தனக்கு வாய்ப்பளித்த ஐசிசி வாரியத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஜெய் ஷா, லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இணைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மைல்கல் உலகெங்கிலும் புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும், எதிர்காலத் தலைமுறையினரை ஊக்குவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், வெற்றிகரமான தொடர்களை நடத்துவதுடன் நின்றுவிடாமல், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான மற்றும் வலிமையான எதிர்காலத்தை உருவாக்குவதே தனது முக்கிய இலக்கு என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


