வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; நாளை புயலுக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?

இந்திய வானிலை மையம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த தற்போதைய அப்டேட்டைக் கொடுத்துள்ளது.

இந்திய வானிலை மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இன்று (நவம்பர் 15, 2026) காலை 5:30 மணி நிலவரப்படி, இது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.

இந்திய வானிலை மையம் பதிவு

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,

> ஸ்ரீ விஜயபுரத்திற்கு (போர்ட் பிளேர் - அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 700 கி.மீ தொலைவிலும்,

> சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே 860 கி.மீ தொலைவிலும்,

> விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 1040 கி.மீ தொலைவிலும்,

> கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கு-தென்கிழக்கே 1160 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது.

புயல் எப்போது?

மேலும், நவம்பர் 16-ம் தேதி தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் புயலாகவும்,

நவம்பர் 17, 2026 அன்று மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும்.

இது வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை ஆகும்.

தமிழ்நாடு பாதிக்கப்படுமா? சித்தரிப்புப் படம்
தமிழ்நாடு பாதிக்கப்படுமா? சித்தரிப்புப் படம்

தமிழ்நாடு...

அறிக்கையின்படி, தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் புயலாக மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு அருகே தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரியும் அமைந்திருக்கிறது.

அடுத்ததாக, மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிரப் புயலாக மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு அருகே சென்னையும் வட கடலோர மாவட்டங்களும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.