கதையை லாக் செய்த பிறகே படப்பிடிப்பு… ‘AA23’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுன் போட்டுள்ள மெகா டீல்!

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிகப்பெரிய பான்-இந்தியா கூட்டணி, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘AA23’ திரைப்படம். பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் கதை மற்றும் பிரம்மாண்ட சம்பள ஒப்பந்தம் குறித்த சுவாரசிய தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘AA23’ திரைப்படத்தின் ஒரு வரிக்கதை (One-line story) மற்றும் திரைக்கதை வடிவம் மிகவும் மிரட்டலாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முழு கதையையும் திரைக்கதையையும் முழுமையாக இறுதி செய்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அல்லு அர்ஜுன், தற்போது கதை திருப்தியளித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்புக்குச் செல்லத் தயாராகியுள்ளார்.

இதற்கிடையில், இந்திய சினிமா வர்த்தகத்தையே ஆச்சரியப்படுத்தும் வகையில் இப்படத்திற்கான சம்பளம் மற்றும் லாபப் பங்கீடு (Profit-sharing) ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி ரூபாய் சம்பளத்துடன், படத்தின் நிகர லாபத்தில் 33 சதவீதப் பங்கும் வழங்கப்படவுள்ளதாம். அதேபோல், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 70 கோடி ரூபாய் சம்பளத்துடன், நிகர லாபத்தில் 33 சதவீதப் பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மீதமுள்ள 33 சதவீத லாபப் பங்கைப் பெறவுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகையும் வசூலிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் நிகர லாபத்திலிருந்து இந்த 33 சதவீதப் பங்கீடு கணக்கிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் சம்பள விவரங்கள் குறித்துப் படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.