டக் அவுட்டில் சாதனை செய்த விராத் கோஹ்லி.. சச்சினை சமன் செய்தார்...
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்ததுடன், நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு விரும்பத்தகாத சாதனையில் சச்சின் டெண்டுல்கரின் பெயருடன் இணைந்துள்ளார்.
மவுண்ட் மாங்கனுவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த விராட் கோலி 4 பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் ஏதுமின்றி டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த ஆட்டத்துடன் சேர்த்து ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் டக்-அவுட் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 20 முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கோலியும் அதே எண்ணிக்கையை எட்டியுள்ளார்.
இந்த மோசமான பட்டியலில் ரோஹித் சர்மா உள்ளிட்ட மற்ற முன்னணி வீரர்களும் முன்னிலையில் உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி 26.4 ஓவர்களில் வெறும் 89 ரன்களுக்கு சுருண்டு, நியூசிலாந்திடம் 244 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது கோலி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


