நியூசிலாந்துக்கு எதிரான 4வது போட்டி.. 333 டார்கெட்.. 89 ரன்களுக்கு ஆல் அவுட்.. படுதோல்வி அடைந்த இந்தியா...
மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில் யங் 125 ரன்களும், சீபர்ட் 58 ரன்களும் எடுத்தனர். 334 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசையானது நியூசிலாந்து பந்துவீச்சாளர் மேட் ஹென்றியின் வேகத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் சரிந்தது.
தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 26.4 ஓவர்களில் வெறும் 89 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேட் ஹென்றி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தக்கவைத்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


