‘அதோமுகம்’ இயக்குநரின் அடுத்த படைப்பு… விரைவில் திரைக்கு வரும் ‘மேரேஜ் ஸ்டோரி’ டிரைலர் எப்படி இருக்கு?

‘அதோமுகம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மேரேஜ் ஸ்டோரி’ (Marriage Story). இப்படத்தில் சித்தார்த் எஸ்.பி, தீபிகா மற்றும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை மூலம் பிரபலமான நடிகை ஷபானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரைப் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இன்றைய தலைமுறை தம்பதியரின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் காதல், புரிதல், எதிர்பார்ப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான சிக்கல்களை எதார்த்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளதை டிரைலர் காட்சிகள் உணர்த்துகின்றன. ‘சத்திய சோதனை’ மற்றும் ‘பரமசிவன் பாத்திமா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துப் பாராட்டுகளைப் பெற்ற தீபன் சக்கரவர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை டிரைலரின் உணர்வுபூர்வமான காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by REEL PETTI (@thereelpetti)

காதலும் குடும்ப உணர்வுகளும் கலந்த ஒரு எதார்த்தமான படைப்பாக உருவாகியுள்ள ‘மேரேஜ் ஸ்டோரி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.