சிம்மத்தில் இணையும் கேது - செவ்வாய்: கவனம் பெறும் அடுத்த 21 நாள்கள்... உங்கள் ராசிக்கு எப்படி?

சக்தி மிக்க 5 கிரகங்களில் அங்காரனாகிய செவ்வாய் பகவானுக்குத் தனி இடம் உண்டு. செவ்வாயை `வீரத்தின் அதிபதி’ என்கின்றன ஜோதிடநூல்கள். சிவப்பு நிறம், மருத்துவம், விளையாட்டு, அதிகாரம் ஆகியவற்றுக்கு அதிபதி. செவ்வாய் சிம்ம ராசிக்குள் நவம்பர் 13 முதல் நுழைந்து, நவம்பர் 15 அன்று கேதுவுடன் துல்லியமாக இணைகிறார் (டிசம்பர் 5 வரை).

கேது பகவான்

இதே காலகட்டத்தில் குருவும் சிம்மத்தில் இருப்பதால் மூன்று கிரகங்களின் சேர்க்கையும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆக அடுத்த 21 நாள்கள் 12 ராசிகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் - பலன்கள் என்ன? தெரிந்துகொள்வோமா?

1. மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் கிரகச் சேர்க்கை பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாம் வீட்டில் நிகழ்கிறது. பிள்ளை கள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பூர்விகச் சொத்துகள் தொடர்பான முயற்சிகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் முதலீடுகளில் புதிய சிந்தனைகள் தோன்றும். முருகனை வழிபடுவதால் மன அமைதியும் தெளிவும் உண்டாகும்.

2. ரிஷபம்: உங்கள் ராசிக்கு இந்தச் சேர்க்கை நான்காம் வீட்டில் நிகழ்வதால் வீடு, வாகனம், தாயார் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவைப்படும். வீடு அல்லது நிலம் வாங்கும் முயற்சிகளில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். வாகனங்களை ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அம்பாளை வழிபடுங்கள்; நன்மை உண்டாகும்.

3. மிதுனம்: இந்தக் கிரகச் சேர்க்கை ராசிக்கு மூன்றாம் வீட்டில் நிகழ்வது தைரியத்தையும் முயற்சியையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்களைச் செய்து முடிக்க வாய்ப்பு கள் உருவாகும். அதேநேரம், இளைய சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசும்போது நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பயணங்களின் போது கவனம் அவசியம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் அதிகரிக்கும்.

4. கடகம்: உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்தச் சேர்க்கை நிகழ்கிறது. குடும்பம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங் களில் கவனம் தேவைப்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சிக்கனம் அவசியம். வீட்டில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்க்கவும். உணவு மற்றும் உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம். கொடுக்கல் வாங்கல் மற்றும் நிதி சார்ந்த ஒப்பந்தங்களில் அவசரம் காட்டக்கூடாது. அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

5. சிம்மம்: உங்கள் ராசியிலேயே இந்தச் சேர்க்கை நிகழ்கிறது. மனதிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட லாம். கோபம், அவசரம், பிடிவாதம் கூடாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பொறுப்புகள் வரக்கூடும். வாழ்க்கைத்துணை மற்றும் கூட்டுத் தொழில் செய்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல்நலம் மற்றும் வாகனப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. குருவின் இணைவு இருப்பதால் ஆன்மிகச் சிந்தனையும் நல்ல வழிகாட்டுதலும் கிடைக்கும். தினமும் நரசிம்மரை மனதார வழிபடுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

6. கன்னி: ராசிக்கு 12-ல் இந்தக் கிரகச்சேர்க்கை நிகழ்கிறது. செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்கள், ஆடம்பரங்களை தவிர்க்கவும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் சில முன்னேற்றங் கள் ஏற்படலாம். தூக்கம் மற்றும் மன அமைதியில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகம் தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் உண்டா கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவதால் வெற்றிகள் உண்டாகும். தியானம், இறை வழிபாடு மன உறுதியைத் தரும். வீட்டில் குலதெய்வத்துக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்; எதிர்ப்புகள் விலகும்.

செவ்வாய்-கேது சேர்க்கை பலன்கள்!

7. துலாம்: லாபஸ்தானத்தில் இந்தக் கிரகச் சேர்க்கை நிகழ்கிறது. வருமானம் மற்றும் லாபம் தொடர்பான விஷயங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் மூலம் ஆதாயம் ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிகளுக்கு திட்டமிட ஏற்ற காலம். அவசர முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வரளி சமர்ப்பித்து முருகப்பெருமானை வழிபடுங்கள்; நல்லது நடக்கும்.

8. விருச்சிகம்: உங்கள் ராசிக்கு 10-ல் நிகழ்கிறது இந்தக் கிரகச் சேர்க்கை. தொழில் மற்றும் உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பொறுப்புகளும் வேலைப்பளுவும் அதிகரிக்கலாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் நன்கு திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. தொழில் சார்ந்த போட்டி களில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமடையும். வேல்மாறல், திருப்புகழ் படித்து முருகனை வழிபடுங்கள்; நினைத்தது நிறைவேறும்.

9. தனுசு: உங்களுக்கு ராசிப்படி இந்தச் சேர்க்கை ஒன்பதாம் வீட்டில் நிகழ்வதால் பாக்கியம், தந்தை, குரு மற்றும் தர்மம் தொடர் பான விஷயங்களில் கவனம் திரும்பும். ஆன்மிகப் பயணங்கள் மற்றும் ஆலய வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கலாம். தந்தை மற்றும் பெரியவர்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீண்ட தூரப் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். உயர்கல்வி மற்றும் வெளிநாட்டுக் கல்வி முயற்சிகளில் சில தடைகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யலாம். குலதெய்வ வழிபாடு மற்றும் பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவது நன்மை தரும்.

10. மகரம்: மகரத்துக்கு இந்தச் சேர்க்கை எட்டாம் வீட்டில் நிகழ்வதால் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலமாக அமையும். பணம் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வாகனப் பயணங்களிலும் இயந்திரங் களைக் கையாளும்போதும் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாமல் முறையான பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தியானம் மன அமைதியைத் தரும்.

11. கும்பம்: உங்கள் ராசிக்கு இந்தக் கிரகச் சேர்க்கை ஏழாம் வீட்டில் நிகழ்வதால், வாழ்க்கைத்துணையுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரக் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தாலும், யோசித்து ஏற்பது அவசியம். குடும்பத்தாருடனும், பங்குதாரர்களுடனும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆஞ்சநேயருக்குச் செந்தூரம் சாத்தி வழிபடுங்கள்; நினைத்ததைச் சாதிப்பீர்கள்.

12. மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்தச் சேர்க்கை ஆறாம் வீட்டில் நிகழ்வதால் எதிரிகள், கடன்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகள் வெற்றியடையலாம். பணியிடத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் திறமையுடன் செயல்பட முடியும். கடன் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேற்றம் அடையலாம். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளை சாத்தி வழிபடுங்கள்; வளம் உண்டாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.