ஹாலிடே இன் பை IHG ஹோட்டலில் கிருஸ்துமஸ் கேக் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கேக் உருவாகும் பின்னணியில் இருக்கும் சுவையான பாரம்பரியம்!"
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே வண்ண விளக்குகள், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள், பரிசுப் பொருட்கள் மட்டுமின்றி சுவையான கேக்குகளும் நினைவுக்கு வரும். குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் பாரம்பரிய பிளம் கேக்க்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இத்தகைய கேக்குகளைத் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட நிகழ்வான கேக் மிக்ஸிங் செரெமோனி , உலகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னையின் திருவான்மியூரில் அமைந்துள்ள ஹாலிடே இன் பை IHG ஹோட்டல் சார்பில் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக கொண்டாட நடத்தப்பட்ட ஆனுவல் கேக் மிக்ஸிங் செரெமோனி நிகழ்ச்சி நவம்பர் 11ம் தேதி நடைப்பெற்றது.
கேக் மிக்ஸிங் செரெமோனி என்றால் என்ன?
கேக் மிக்ஸிங் செரெமோனி என்பது கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட நிகழ்வாகும்.
குறிப்பாக பிளம் கேக் எனப்படும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்குத் தேவையான பல்வேறு பொருட்களை ஒன்றாகக் கலந்து ஊறவைக்கும் நிகழ்வுதான் கேக் மிக்ஸிங் செரெமோனி .இதில் முக்கியமாக மூன்று வகையான பொருட்கள் இடம்பெறுகின்றன.
உலர் பழங்களான உலர் திராட்சை, கருப்பு உலர் திராட்சை, பேரீச்சம்பழம், செர்ரி பழங்கள், சர்க்கரைப் பாகில் பதப்படுத்தப்பட்ட பழத் துண்டுகள், உலர் ஆப்ரிகாட், அத்திப்பழம் போன்றவையும், பருப்பு வகைகளான பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, பெக்கான் பருப்புகள் போன்றவைகளும், வாசனைப் பொருட்களான இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், இஞ்சி தூள், ஏலக்காய் போன்ற அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட அளவில் ஒன்றாகக் கலக்கப்படுகின்றன.

அடுத்து பாரம்பரிய செய்முறைகளின் படி ரம் , பிராண்டி , வைன் போன்ற மதுபானங்களும் அதனுடன் சேர்த்து ஒன்றாக கலக்க பயன்படுத்தப்படுகின்றன. மதுபானம் இல்லாமலும் பழச்சாறு அல்லது பிற பொருட்களுடன் ஊறவைத்து கேக் தயாரிக்க முடியும்.
இந்தப் பாரம்பரியம் எப்போது, எங்கு தொடங்கியது?
கேக் மிக்ஸிங் செரெமோனி பாரம்பரியம் ஐரோப்பிய உணவுக் கலாச்சாரத்துடன் தொடர்புடையது. குறிப்பாக பிரிட்டிஷ் கிறிஸ்துமஸ் உணவுப் பாரம்பரியத்தில் இதற்கு முக்கிய இடமுண்டு.
பழங்காலத்தில் குளிர்காலத்திற்கான உணவுகளை முன்கூட்டியே தயார் செய்து பாதுகாப்பது வழக்கமாக இருந்தது. உலர் பழங்கள், நட்ஸ் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் பாதுகாக்கக்கூடிய உணவுகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் இந்த உணவுப் பழக்கம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துடன் இணைந்தது.
குறிப்பாக கிறிஸ்துமஸ் புட்டிங் மற்றும் கிறிஸ்துமஸ் புரூட் கேக் ஆகியவற்றில் உலர் பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. காலப்போக்கில் இந்தத் தயாரிப்பு முறையே ஹோட்டல்களில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக மாறியது.

இன்றைக்கு இந்தியாவின் பல நட்சத்திர ஹோட்டல்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கேக் மிக்ஸிங் செரெமோனி நடத்தப்படுகிறது.
ஏன் கிறிஸ்துமஸுக்கு முன்பே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்?
இதுதான் இந்த நிகழ்ச்சியின் மிக முக்கியமான அம்சம். பொதுவாக கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு முன்பாகவே உலர் பழங்களைத் தயாரித்து ஊறவைத்து வைப்பார்கள்.
இதற்குக் காரணம் என்னவென்றால்:
1. சுவையை அதிகரிக்க:
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவை ஒன்றாகக் கலக்கப்படுவதால் கேக்கிற்குத் தனித்துவமான சுவை கிடைக்கிறது.
2. நறுமணத்தை உருவாக்க:
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்கள் கேக்கிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகின்றன.
3. ஈரப்பதத்தைப் பராமரிக்க:
பழங்களைச் சரியான முறையில் ஊறவைப்பது கேக்கின் ஈரப்பதம் மற்றும் சுவைக்கு உதவுகிறது.
4. பாரம்பரியத்தைப் பாதுகாக்க:
பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் உணவுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதே இதன் மற்றொரு நோக்கம்.
கேக் மிக்ஸிங் செரெமோனி எப்படி நடைபெறும்?
நம்மிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கூறியதாவது, நட்சத்திர ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி பின்வரும் முறையில் பின்பற்றப்படுகிறது. முதலில் நாங்கள் (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்),
ஹோட்டல் சமையல் கலைஞர்கள் ஒரு பெரிய மேஜையில் உலர் பழங்கள், நட்ஸ், மசாலாப் பொருட்கள் மற்றும் ரம் , பிராண்டி , வைன் போன்ற மதுபானங்களும் தயார் செய்து வைத்துக் கொள்வோம்.
அடுத்தாக சமையல் கலைஞர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் கேக் மிக்ஸிங் பாரம்பரியம் குறித்து வந்த விருந்தினர்களிடம் விளக்கி கூறுவார்கள். பின்னர் கேக் மிக்ஸிங் தொடக்கமாக பெரிய செவ்வக வடிவிலான மேசையில் பல்வேறு உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றால் அதில் நிரப்பி வைத்திருப்போம். சமையல் கலைஞர்கள் அதில் மசாலா பொருட்கள் சேர்ப்பார்கள்.

அடுத்தப்படியாக செஃப் , ஜெனரல் மேனேஜர் , ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் வந்திருந்த விருந்தினர்கள் என அனைவரும் இணைந்து ரம் , பிராண்டி , வைன் போன்ற மதுபானங்களை தயார் செய்து வைத்திருந்த உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் ஊற்றி ஒன்றோடு ஒன்றாக கலக்குவார்கள். இறுதி நிகழ்வாக தயாரிக்கப்பட்ட கலவையை உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப பாதுகாப்பாக எடுத்து சென்று பத்திரமாக வைக்கப்படும். பின்னர் அது கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்றார். இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் பண்டிகைக்காக கேக் தயாரிக்கும் வழக்கம் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் ஹோட்டல்கள் மற்றும் மக்கள் தீபாவளி பண்டிகையை முடித்த கையோடு அடுத்தாக கிருஸ்துமஸ் பண்டிக்கையை கொண்டாட இப்பொழுதே தயார் ஆகி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


