நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...
மருத்துவ உலகின் பெரிய சவாலாக புற்றுநோயும், நீரிழிவு நோயும் இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை 8 கோடியை 98 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில் 3 கோடியே 86 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை என ஆய்வில் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 43 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை..நீரிழிவு நோய் இருப்பது தெரியாமல் இருப்பதால் உரிய நேரத்தில் சிகிச்சை தொடங்க முடியாத நிலையில் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது
எனவே, நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

