உச்சத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு...

 

 

இந்திய பங்குச்சந்தைகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் அதிரடி ஏற்றத்தை கண்டுள்ளன. 

 

வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 25,337.80 என்ற அளவிலும், சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 82,248.68 என்ற புள்ளிகளிலும் தொடங்கின. அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.72 ஆக உள்ளது. அதேபோல, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 92 டாலராகக் குறைந்துள்ளது.

 

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள போதிலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மேற்கு ஆசிய பகுதியில் நிலவும் இந்த முரண்பாடான தகவல்களால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முந்தைய வர்த்தகத்தில் வங்கி பங்குகளின் உயர்வால் சென்செக்ஸ் 107.25 புள்ளிகள் உயர்ந்து 81,106.65 என்ற அளவிலும், நிஃப்டி 58.25 புள்ளிகள் உயர்ந்து 25,044.65 என்ற அளவிலும் நிறைவடைந்தன. 

 

முதலீட்டாளர்கள் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்காவின் பணவீக்க தரவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலகளாவிய சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே பங்குச்சந்தையின் அடுத்தகட்ட நகர்வு அமையும் எனப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.