‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் களம் இறங்குது! விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கல் 2027 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஆரண்ய காண்டம்’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய தொலைநோக்கு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கதாநாயகனாக நடிக்க, அவருடன் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி (Raj B. Shetty) மற்றும் ஆடுகளம் கிஷோர் (Aadukalam Kishore) உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘வெட்டுவம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
View this post on Instagram
டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் (Tyler Durden and Kino Fist) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் ஜனவரி 14, 2027 அன்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது எனப் படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


