லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் யூடியூபர் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’! கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்!

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தனது ஜி ஸ்குவாட் (G Squad) நிறுவனம் சார்பில் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் புதிய திரைப்படமான ‘மிஸ்டர் பாரத்’ (Mr. Bhaarath) படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் நிரஞ்சன் (Niranjan) இயக்கத்தில் உருவாகியுள்ள இக்காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் (Bhaarath) கதாநாயகனாகவும், ‘கட்சி சேர’ பாடல் புகழ் சம்யுக்தா விஸ்வநாதன் (Samyuktha Viswanathan) கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ் (Pranav Muniraj) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

கலகலப்பான காதல் கதையம்சத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படம் வரும் டிசம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.