ரூ.15 கோடி குதிரை பேர புகார்: MLA முஸ்தபாவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை; அதிமுக பிரமுகர் கைது
தவெக ஆட்சியைக் கவிழ்பதற்காக 15 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ மாதர் பதுருதீன் முஸ்தபா நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று காலை அதிமுகவைச் சேர்ந்த பி.எம். மன்னனை மதுரை குற்றபிரிவு போலீசார் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனி என்பவர் இது தொடர்பாக விளக்கமளிக்க குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு வருகை தந்தார். புகார் அளித்த மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முஸ்தபாவிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள், ஆடியோ ஆதாரங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்புகள் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பன குறித்து கனியிடம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

