டெல்லியில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்.. என்ன காரண?

 

 

இந்த ஆண்டு டிசம்பர் 13 அன்று டெல்லியில் நடைபெறவிருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள்  கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்  விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  உறுதி செய்துள்ளது.

 

டெல்லியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

 

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர், 2026-ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடராகும். முதல் போட்டி விசாகப்பட்டினத்திலும், இரண்டாவது போட்டி பெங்களூரிலும், இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளன.

 

டெல்லி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதால், விராட் கோலிக்கு டெல்லியில் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 38 வயதான விராட் கோலி, ஒருநாள் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெல்லி ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

இத்தொடரைத் தொடர்ந்து டிசம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ராஜ்நாத், கட்டாக் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று T20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.