2027ஆம் ஆண்டின் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அட்டவணை.. முதல் போட்டி யார் யாருக்கு?
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2027 ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2027 ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வதோதராவில் மோதவுள்ளன.
தொடரின் முதல் கட்ட போட்டிகள் அனைத்தும் ஜனவரி 14 முதல் 24 வரை வதோதராவில் நடைபெறவுள்ளன. அதனை தொடர்ந்து, ஜனவரி 26 முதல் எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி உள்ளிட்ட இரண்டாம் கட்டப்போட்டிகள் மும்பையில் நடைபெறுகின்றன. தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதியும், சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பை சிசிஐ மைதானத்திலும் நடைபெறும்.
தொடர்ந்து நான்கு முறை ரன்னர்-அப் பட்டம் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, தனது முதல் போட்டியில் ஜனவரி 16 அன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. வதோதரா மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களில் மட்டும் 25 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெறும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் ஐபிஎல் 2027 போட்டி அட்டவணையின் முழு விவரங்கள்:
| ஜனவரி 14 | ஆர்சிபி vs எம்ஐ | வதோதரா |
| ஜனவரி 15 | ஜிஜி vs யூபி-டபிள்யூ | வதோதரா |
| ஜனவரி 16 | டிசி vs ஆர்சிபி | வதோதரா |
| ஜனவரி 17 | யூபி-டபிள்யூ vs எம்ஐ | வதோதரா |
| ஜனவரி 18 | ஜிஜி vs டிசி | வதோதரா |
| ஜனவரி 19 | ஆர்சிபி vs யூபி-டபிள்யூ | வதோதரா |
| ஜனவரி 20 | ஜிஜி vs எம்ஐ | வதோதரா |
| ஜனவரி 21 | யூபி-டபிள்யூ vs டிசி | வதோதரா |
| ஜனவரி 22 | ஜிஜி vs ஆர்சிபி | வதோதரா |
| ஜனவரி 23 | டிசி vs எம்ஐ | வதோதரா |
| ஜனவரி 24 | யூபி-டபிள்யூ vs ஜிஜி | வதோதரா |
| ஜனவரி 26 | எம்ஐ vs ஆர்சிபி | மும்பை |
| ஜனவரி 27 | டிசி vs ஜிஜி | மும்பை |
| ஜனவரி 28 | எம்ஐ vs யூபி-டபிள்யூ | மும்பை |
| ஜனவரி 29 | ஆர்சிபி vs டிசி | மும்பை |
| ஜனவரி 30 | எம்ஐ vs ஜிஜி | மும்பை |
| ஜனவரி 31 | யூபி-டபிள்யூ vs ஆர்சிபி | மும்பை |
| பிப்ரவரி 1 | எம்ஐ vs டிசி | மும்பை |
| பிப்ரவரி 2 | ஆர்சிபி vs ஜிஜி | மும்பை |
| பிப்ரவரி 3 | டிசி vs யூபி-டபிள்யூ | மும்பை |
| பிப்ரவரி 5 | எலிமினேட்டர் (Eliminator) | மும்பை |
| பிப்ரவரி 7 | இறுதிப்போட்டி (Final) | மும்பை |
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


