ஜோக்ஸ்... - கட்சி ஆஃபீஸ்!
“தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்போச்சா?”
“ஆமா. கட்சி ஆபீஸ்ல அவர் பேருக்குக் கீழே, ‘24 மணி நேர சேவை’ன்னு எழுதியிருக்காரே!”
- எஸ்.முகம்மது யூசுப்

“தலைவர் பல கட்சிகளைப் பார்த்தவருன்னு எதைவெச்சு சொல்றே?”
“அவரோட வீட்டில் இருக்குற சூட்கேஸுகளை வெச்சுதான்!”
- மூ.மோகன்

“கட்சி ஆபீஸ் முன்னாடி, ‘இங்கு எல்லா அட்ரஸுக்கும் வழிகாட்டப்படும்னு போர்டு வெச்சிருக்கீங்களே, ஏன் தலைவரே?”
“வழி கேட்கவாவது ஆட்களை உள்ளே வரவழைக்கலாம்னுதான்யா!”
- வி.நர்மதா

“கூட்டணியில் இணைந்துவிட்டதால், முன்பு இந்தத் தலைமையைக் கண்டபடி திட்டி நாங்கள் பேசிய வீடியோக்களையெல்லாம், தயவுசெய்து AI வீடியோக்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் மக்களே!’’
- திருப்பூர் சாரதி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


