Ramayana: அதனால் ராமாயணா 2 2028-ம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறது! - தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் ராமாயணா திரைப்படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் அடுத்த பாகம் குறித்துத் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பகிர்ந்திருக்கிறார்.
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, "முதல் பாகத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கண்டு, படத்தின் இறுதிப் பகுதியை இன்னும் பிரமாண்டமாக உருவாக்கக் கூடுதல் நேரம் தேவை என முடிவு செய்துள்ளோம்.
இது போன்ற பிரமாண்டமான ஒரு படைப்பிற்கு முழுமையான நியாயம் செய்யவே இந்த ஓராண்டு கூடுதல் கால அவகாசம்.

அவசர அவசரமாக எதையும் செய்து முடிக்க நாங்கள் விரும்பவில்லை. தொடக்கத்தில் இப்படத்தை 3 பாகங்களாக உருவாக்கவே திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், அதற்குப் பிறகு 2 பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டோம்" எனக் கூறியிருக்கிறார்.
இப்படத்தில் ராவணனாக யஷ், ஹனுமானாக சன்னி தியோல், லக்ஷ்மணனாக ரவி துபே, சூர்ப்பநகையாக ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


