புதிய தமிழ் படங்களுக்கு தினமும் 6 காட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு – தீபாவளி ரிலீஸ்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

தமிழ் திரையுலகிற்கு உற்சாகமளிக்கும் வகையில் ஒரு மிக முக்கியமான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, இனிவரும் காலங்களில் புதிய தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முதல் வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் (6 Shows Daily) நடத்த அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளியீட்டு நாளிலிருந்து முதல் ஒரு வாரத்திற்குத் திரையரங்கங்களின் இயங்கும் நேரம் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 2:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் இனி தங்களது மாஸ் ஹீரோக்களின் படங்களின் முதல் நாள் முதல் காட்சியைத் (FDFS) தடையின்றிச் சீராகக் காலை 6:00 மணிக்கே கண்டுகளிக்க முடியும்.
இந்த அதிரடியான மற்றும் வரவேற்கத்தக்க அரசாணை, வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக் கால ரிலீஸ்-ஆகயுள்ள ‘சீன்’ (Scene), ‘மூக்குத்தி அம்மன் 2’ (Mookuthi Amman 2) மற்றும் ‘ராமாயணம்’ (Ramayana) உள்ளிட்ட திரைப்படங்கள் முதல் அமலுக்கு வருகிறது. கோலிவுட் திரையுலகம் புத்துயிர் பெற்றுத் தழைத்தோங்கும் இந்தக் காலகட்டத்தில், சினிமா துறையின் வணிக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தச் சாதகமான நடவடிக்கைக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


