``பத்தா படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்து ரொம்பவே அழுதேன்..! - அனுராக் காஷ்யப்
விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் பத்தா.
மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சிறுவன் சாய் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியிருந்த நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் பத்தா படத்தைப் பாராட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``இந்த வாரத்தில் 2வது முறையாக பத்தா படத்தைப் பார்த்தேன்.
இந்த முறை நான் நிறைய விஷயங்களை கவனித்தேன். நிறைய உணர்ந்தேன். நிறைய அழுதேன்.
அந்த பாத்ரூமில் பூட்டப்படும் காட்சியின்போது அவர் பசியுடன் இருந்திருப்பார் என நினைக்கிறேன். நான் அதை அவர் கண்களில் பார்த்தேன். அவரிடமே பேசி அதை உறுதி செய்து கொண்டேன்.
இறுதிக்காட்சியில் அந்தச் சிறுவன் பயத்தில் பேசுவதை எளிதாக உணர முடிந்தது. நான் பார்த்த சிறுவர்களிலேயே சிறப்பான நடிப்பை இந்தச் சிறுவன் வழங்கியிருக்கிறார்.
ஆண் திரையில் அழுவதைப் பார்க்கும்போது உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. பத்தா அவர் மனைவியிடம் சொல்லும் காட்சி மற்றும் நீண்ட நாள்களாக அந்தச் சிறுவன் கஷ்டத்தை அனுபவிக்கும் காட்சி நம்மை உடைத்துவிடுகிறது.

டோரதி, பத்தா போல பல திரைப்படங்கள் நமக்குத் தேவை. டோரதி படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த சனத் மற்றும் பத்தா படத்தில் சபரியாக நடித்த சிறுவன் சாய் பிரித்விராஜ் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


