இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இந்திய பந்துவீச்சு அபாரம்...
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் 9 ரன்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 9 ரன்களிலும் ஆர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்ஃபெர்ட் 38 ரன்கள் எடுத்திருந்த போது குர்னூர் பிரார் பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது வரை நியூசிலாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் டேரில் மிட்செல் 17 ரன்களுடனும், கேப்டன் டாம் லேதம் 1 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


