Power Up: அஜித் குமார் ரேசிங் உடன் கூட்டணி! 9 புதிய பிஸ்கட் வகைகளை அறிமுகப்படுத்திய Reliance
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் ‘இன்டிபென்டன்ஸ்’ என்கிற பெயரில் 9 புதிய பிஸ்கட் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிஸ்கட் அறிமுகம் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நடந்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
"ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எஃப்.எம்.சி.ஜி (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தனது ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence) பிஸ்கட்டுகளை 9 புதிய ரகங்களுடன் விரிவுபடுத்தியுள்ளது.
இந்தப் புதிய ரகங்கள் தமிழ்நாட்டில் 2026 நவம்பர் 2 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
நிறுவனத்தின் பிஸ்கட் வணிகத்திற்கு தமிழ்நாடு ஒரு மிக முக்கியமான சந்தையாகும். இங்கு அதிகரிக்கப்பட்டுள்ள உற்பத்தித் திறன், வணிகத்தை விரிவுபடுத்தவும் அதிகப்படியான நுகர்வோரைச் சென்றடையவும் துணைபுரியும்.
‘இன்டிபென்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட்டின் அறிமுகமானது ‘அஜித் குமார் ரேசிங்’ அமைப்புடனான பிராண்ட் கூட்டாண்மையுடன் நடைபெறுகிறது.
ஏன் இந்தப் பிராண்ட் கூட்டாண்மை?
மோட்டார் விளையாட்டுகளின் வேகம் மற்றும் செயல்திறனுக்கு இணையான இந்தத் தயாரிப்பின் தனித்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்தத் தொடர்பு அமைந்துள்ளது.
இந்த இணைப்பு தமிழ்நாட்டில் பிராண்டின் கவனத்தையும் விழிப்புணர்வையும் அதிகரித்து, சந்தை விரிவாக்கத்திற்குப் பெரும் பக்கபலமாக இருக்கும்."
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


