ஓமர் அப்துல்லா பத்திரிகையாளர் நிதியை திருமணம் செய்தது செல்லாது! - ஜமாத் தலைவர் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா சமீபத்தில் பத்திரிகையாளர் நிதி ராஜ்தான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஓமர் அப்துல்லாவிற்கு சுப்ரீம் கோர்ட் விவாகரத்து வழங்கியதை தொடர்ந்து இத்திருமணத்தை அறிவித்துள்ளார்.
முதலில் ஓமர் அப்துல்லா திருமணம் செய்த பெண் இஸ்லாமியர் கிடையாது. இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கும் நிதி ராஜ்தானும் முஸ்லிம் கிடையாது. இதனால் இத்திருமணம் மத சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் மௌலானா முஃப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி அளித்த பேட்டியில், `இஸ்லாமிய கொள்கைகளின்படி ஓமர் அப்துல்லாவின் திருமணம் சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பரேல்வி மேலும் கூறுகையில், ஷரியாவின் கீழ் ஒரு திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க இரு நபர்களும் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதால் இஸ்லாமிய கொள்கைகப்படி இருவருவரது திருமணம் செல்லுபடியாகாது.
இருவரில் ஒருவர் முஸ்லீம் இல்லை என்றால், திருமணத்தை சட்டப்பூர்வமாக கருத முடியாது. இந்த விஷயத்தில் நிதி ராஜ்தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதை ஓமர் அப்துல்லா உறுதி செய்திருக்க வேண்டும்.
அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தால் மற்றும் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி இருவரும் திருமணம் செய்து கொண்டால், ஷரியாவின் கீழ் திருமணம் அனுமதிக்கப்பட்டதாக கருதப்படலாம் என்று அவர் கூறினார்.
ஒமர் அப்துல்லா இதற்கு முன்பு பாயல் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுப்ரீம் கோர்ட் வரை சென்று விவாகரத்து செய்து கொண்டனர். 56 வயதாகும் ஓமர் அப்துல்லா தற்போது பெண் பத்திரிகையாளர் நிதி ராஜ்தானை (49) இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
