ஐபிஎல் 2027: 2 வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு.. ரூ.28 கோடி மிச்சமாகுமா?

 

 

 

ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக, வீரர்களை தக்கவைப்பதற்கான கெடு நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுத்த 20 வயதான ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீரை அணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

கடந்த 2026 மினி ஏலத்தில் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இரு அன்கேப்டு வீரர்களுக்காக சிஎஸ்கே ரூ.28.4 கோடி செலவிட்டது. ரவீந்திர ஜடேஜாவிற்கு மாற்று வீரராக களமிறக்கப்பட்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாந்த் வீர், கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 90 ரன்கள் மட்டுமே எடுத்தார்; மேலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

 

தற்போது சிஎஸ்கேவின் ஏலப்பையில் ரூ.2.4 கோடி மட்டுமே உள்ள நிலையில், பிரசாந்த் வீரை விடுவிப்பதன் மூலம் அணி நிர்வாகம் தனது தொகையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் தலைமையிலான நிர்வாகம், இவரை ஏலத்தில் குறைந்த விலைக்கு மீண்டும் வாங்க முயற்சி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. 

 

அதேவேளையில், பஞ்சாப் கிங்ஸ் அணி தனது நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கோ ஜான்சனை விடுவிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.