தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன - ஸ்டாலின் குற்றச்சாட்டு
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவெக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் பட்டியலின் விளக்கப்படத்தைக் குறிப்பிட்டும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்தும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.
அப்பதிவில், "GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்குக் காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government" (கடினமான காலங்களுக்குத் தயாராக இருங்கள். தவெக ஆட்சியின் கீழ் தமிழ்நாடு அழிவைச் சந்திக்கும்) என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


